”அலையோசை” திரைப்படம் குறித்து....  

Posted by நாண்

”அலையோசை”

1995 களில் வெளிவந்த படம் இது..விஜயகாந்த் புரட்சிகனல் என்கிற பட்டத்துடன் நடித்திருந்த படம் இது..தமிழில் பெரும்பாலான சிவப்பு சிந்தனை கொண்ட படங்களில் விஜயகாந்த் கதை நாயகனாக நடித்திருப்பார்..அப்படியான ஒரு திரைப்படம் இது..

இப்படம் பற்றிய மேலோட்டமான நினைவுகள் இருந்தனவே தவிர,ஆழமான எண்ணம் இல்லாமல் இருந்தது...

நண்பர்களின் வாயிலாக இது தலித் கதை நாயகனை முன்னிலைப்படுத்திய படம் என்றளவில் புரிந்துணர்வு ஏற்பட்டது...

படத்தை பார்க்க வாய்ப்பிலாமல் போய்..முக நூல் நண்பர் pichi muthu அவர்கள் எனது நிலை செய்தி கண்டு உடனடியாக படத்தை எனக்கு வாங்கி அனுப்பினார்...பார்க்க கூடிய வசதிகள் குறைவாக இருந்ததால் இவ்வளவு தாமதமாக எழுதுகிறோம்..

படம் வெளியூரில் படித்து விட்டு சொந்த ஊருக்குள் வந்து வேலை தேடும் தலித் இளைஞனை பற்றி துவங்குகிறது..வழக்கமான மசாலா தன்மையோடு தொடங்கி,கீழ் வெண்மனி யில் கொல்லப்பட்டவர்களின் கதையாக விரிவு கொண்டு,அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் திரைப்படமாக எழுந்து நிற்கிறது...

நன்றி இயக்குனர் சிறு முகை ரவி அவர்களே..


காட்சிகளிலும் வசனங்களிலும் லியாகத் அலிகான்+விஜயகாந்த் கூட்டணி அமைத்த திரைப்படங்களை போலவே வலிமையானதாக இருகிறது..

குறிப்பாக “ ஆயுதம் நமது பாதுகாப்பிற்க்கு தான்..பழிவாங்க அல்ல..”

”தேவையற்று பயன்படுத்தப்படும் ஆயுதமும் நோக்கத்தை சிதைக்கும்”

”கோயிலுக்குள்ள நுழைய கூடாதுங்கறது அந்த காலம்..கருவறையும் எங்களோடது இந்த காலம்”

இப்படி அனல் பறந்தாலும் ,அழகியலற்ற,கலைக்கான எவ்வித பார்வையும் அற்ற வகையில் மிக சாதாரண சினிமாக ,பொழுது போக்கு விடயமாக இம்மாபெரும் உழைக்கும் மக்களின் வாழ்வாதார போராட்டம் கையாளப்பட்டிருகிறது..வருத்தமாக இருக்கிறது..


இந்த படத்தில் இடம் பெரும் இப்பாடல் மிக உக்கிரமான பாடல்...


காணுங்கள்..

This entry was posted on Monday 2 September 2013 at 14:05 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment