அய்யயோ புள்ளை புடிக்கிற பூச்சாண்டின்னு யாரும் பயந்து போயிராதிங்க.. இவர் பெரிய சாமியாரு... எல்லாருக்கும் யோகா சொல்லித்தரவரு.. நாட்டுக்கே இவர நல்லா தெரியும்.. பேரு பாபா ராம்தேவ் ... தொழில்.. நேத்து வரைக்கும் இந்துத்துவா பேசிக்கிட்டு,யோகா பயிற்சி வகுப்பு எடுத்துக்கிட்டு ஆன்மிகம் பேசி ஊரை ஏமாத்துறது.. இன்னைக்கு?! இவரு பெரிய ஹீரோ தெரியும்ல.... லஞ்ச ஒழிப்புக்காகவும் , பதுக்கப்பட்டு கிடக்கிற கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதற்கும் உண்ணா விரதம் இருக்காரு.... அதுவும் அடையாள உண்ணாவிரதம் கிடையாது..சாகும் வரை உண்ணா விரதம்(யார் சாகுற வரைக்கும்னு சத்தியமா எனக்கு தெரியாது)
உண்ணா விரதமிருக்க அவர் கூறிய வாதங்கள்,கருத்து யுத்தங்கள், அரசியல்வாதிகள் மீது அவர் சாடும் குற்றச்சாட்டுகள் எல்லாத்தையும் அப்புறமா பேசுவோம்.. அதுக்கு முன்னாடி இவர் யாருன்னு பேசுவோம்... இவரை பத்தி பேச என்ன இருக்கு?பாவம் சாமியாரு அதும் யோகா சொல்லி தர்றவருன்னு யோசிக்காதிங்க... இவர் யோகா சொல்லி தார சாமியாருதான்.. ஆனா யாருக்கு? உங்களையும் என்னையும் மாதிரி சாமானியனுக்கா?! அட கிறுக்கு பய மக்கா..(என்னையும் சேத்துத்தான் .. ஏன்னா நானும் முதல்ல உங்கள மாதிரிதான நினைச்சேன்...) நாம நினைக்கிரத்து ரொம்ப தப்பு... இவரோட வகுப்புல முதல் வரிசையில உக்கார கட்டணம் எவ்வளவு தெரியுமா? ஐம்பதாயிரம் ரூபாய்.. ஒரு மாசத்துக்கான கட்டணம் இல்ல.. ஒரு வகுப்புக்கான கட்டணம்..(ஒரு வகுப்பு என்பது ஒரு வாரம் வரை..) என்ன மூச்சு அடைக்கிறது மாதிரி இருக்கா? பொறுங்க.. அவர் வகுப்புல கடைசி வரிசையில் உக்கார கட்டணம் எவ்வளவு தெரியுமா? குறைந்தது முப்பதாயிரம் ரூபாய்... இப்போ கண்ணையும் கட்டுதா?
இன்னொரு முக்கிய செய்தியும் இருக்கு... இவர் பசுவை கொல்றது குத்தம் அதை தடை செய்யணும்,மாட்டு கரி திங்குறவன் எல்லாம் தண்டிக்க படனும் அப்புடின்னு தொடர்ந்து போராடி வருகிற நபர்.. இந்த ஆளு எவ்வளவு கபடதாரி என்பதற்கு இதுதான் பெரிய சான்று.. என்னனு கேக்குறிங்களா? இவரோட மருந்து தயாரிக்கிற நிறுவனத்தில விலங்குகளோட உறுப்புகள்,கொழுப்புகள்,மனித எலும்புகள் எல்லாத்தையும் சேர்த்துதான் மாத்திரை மருந்துகள் எல்லாம் தயாரிக்கிறாரு.. இதை நிரூபிக்கவும் செஞ்சுருக்காங்க... இப்போ தெளிவா புரியுதா.. அயோக்கியன்கள்லயே உலக பெரிய அயோக்கியன் இந்த ஆளுதான்..
இந்த அயோக்கியந்தான் இப்போ எல்லா அரசியல் அயோக்கியனுக்கும் கருப்பு பண முதலைகளுக்கும் எதிரா சாகும் வரை உண்ணா விரதம்னு களம் இறங்கியிருக்கான்..அந்த உண்ணா விரதப் பந்தல் அமைக்க செலவான தொகை மட்டும் இரண்டு கோடி ரூபாய்.. தினசரி தண்ணீருக்கான செலவு மற்று கழிவறை வசதிகளுக்கான செலவு எட்டு கோடி ரூபாய்.. இரண்டு லட்சம் பேர் இந்த உண்ணாவிரத பந்தலில் அமரமுடியும்.. அதுல பெரிய நகைச்சுவை என்னன்னா இந்த இடத்தை இவன் என்ன சொல்லி வாங்கி இருக்கிறான் தெரியுமா?..
இரண்டு லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் யோகா வகுப்பு எடுக்க வேண்டும் என்று.. திடீர்னு அந்த பந்தலை உண்ணா விரத போராட்ட இடமா மாத்தி இவன் மக்கள் நலன் பத்தி பேசுறதுதான் உலகின் மாபெரும் காமெடி.... இதுல இருந்தே புரியல..?! இவன் அடுத்த திட்டம் என்னன்னு.. வேற என்ன அரசியல்தான்.. ஆட்சி அதிகாரம்தான்.. அப்புறம் என்னா கழுதைக்கு இத்தனை வருசமா சாமானியன் மேல இல்லாத அக்கறை பொத்துக்கிட்டு ஓடி வருது... பாருங்க மக்களே..
நம்ம நிலைமை எவ்வளவு கேவலமா போயிருச்சு பாருங்க... நாம கடவுள் மேல வச்சிக்கிற பக்தியையும் ஆன்மீகவாதிகள் மேல வச்சிருக்கிற மரியாதையும் தவறா பயன்படுத்தி பணம் சம்பாதிச்சு குமிச்சதோட இல்லாம ஆட்சி பீடத்துலயும் உக்காந்து நம்மள சாகடிக்க எம்புட்டு விவரமா நடிக்கிறான் பாருங்க... இவன என்ன செய்யலாம்...? நீங்களே சொல்லுங்க...

This entry was posted
on Saturday, 4 June 2011
at 04:31
. You can follow any responses to this entry through the
comments feed
.