தெய்வ திருமகள் ..வனத்தில் முளைத்த பட்டாம்பூச்சிகள்..  

Posted by நாண்

     மூன்றாம் பிறை,மீண்டும் ஒரு காதல் கதை,அஞ்சலி,சின்ன புள்ள ,ஆவாரம்பூ ,நந்தலாலா ..என நீளுகிற ஒரு வகை கதையாடலில் தெய்வ திருமகளும் ஒன்று..குறை மூளையோ,அல்லது,மனப்பிறழ்வின் மூலமாக சிவைதடைந்த மனிதனின் நேயங்களை அவனது உலகத்தையும்,அவர்களை புறம் தள்ளும் சமூகத்தின் உச்ச மனநிலை குறித்தும் சிலாகிக்கிறன நாம் மேலே சொன்ன திரைப்படங்கள்..
                         ஆனால் இன்றைய சமூக மனிதனின் மனபோக்கெங்கும் நந்தலாலாவோ,தெய்வ திருமகளோ,..தனக்கு தேவையற்ற சினிமாவாகவே நினைக்கிற தன்மை உருவாக்கப்பட்டிருக்கிறது..பழைய நகைசுவை நடிகர்கள் யாவரும் யாரிடமும் அடிவாங்கி கொண்டே இருப்பவர்களாக இருந்ததில்லை..கோண மூஞ்சி,கருப்பானவன்,ஒல்லியானவன்,கிறுக்குத்தனமாக நடந்து கொள்பவன்   ,ஏதாவது செய்து விட்டு அடிவாங்குபவன் என்பவர்களாக  கட்டமைக்கப்படும் காலம் கவுண்டமனியிளிருந்து அழுத்தமாக பார்வையாளனுக்குள் பதிவாக துவங்குகிறது.....
                         சமூகத்தின் கோமாளித்தனங்களை கிண்டல் அடித்த  நகைசுவை நடிகர்கள் இன்று சமூகத்தின் கோமாளிகளாக மாறிய பின்பு நிகழும் தமிழ்  திரையில் ,தெய்வ திருமகளில்  கொஞ்சம் அழுத்தமான காட்சிகளை, வாழ்வியலை காட்டும் போது  அது அழுப்புட்டுவதாக கிண்டல் அடிக்கிறான் பார்வையாளன்..
                    சரி தெய்வ  திருமகளுக்கு வருவோம்..
தெய்வ திருமகளுக்கு பெயர் மாற்றிய புண்ணியவான்கள் படத்தை பார்த்து விட்டு கூனி குறுகட்டும்.போற்றி பாடடி பெண்ணே.. பாடலை கொண்டாடி தென் மாவட்டங்களில் சாதியை வளர்த்த சமூகம், ஒரு தேர்ந்த படத்தை பெயர் மாற்ற துடித்த கேவலத்திற்கு பதில் என்றுமே சொல்லாது..
                     தெய்வ திருமகளை i am sam ன் பிரதி என்று சொல்லலாம்..இங்கே இயக்குனர் விஜய்க்கு ஒரு சின்ன குட்டு..மூல படைப்பாளியிடமிருந்து  அறிவு திருட்டுக்கு செய்தமைக்கு அந்த படைப்பாளிக்கு ஒரு நன்றியை அறிவிக்கும் நேர்மையில் உங்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லாமல் போனது..அதற்க்கு நீங்கள் மனம் குறுகி நிற்க த்தான் வேண்டும்..மேலும் வழக்குரைஞ்சர்கள் எல்லோரையும் பார்ப்பானாக காட்டுவதும்,அவன் எல்லோரையும் எப்போதும் ரட்சிப்பான் என்பதும் உங்கள் மடமையும் உச்ச புள்ளி..

                    ஒரு அற்புதமான உலகத்தின் நியாங்களை ,பேரன்பை,அதை பார்வை கருவியாக்கி தமிழர்களுக்கு கொடுத்ததற்காக அதையும் மன்னிக்கிறேன்..இவ்வளவு அழகாக.மயக்கும் மாயங்களை கொண்ட திரைக்கதை வடிவமைப்பின் மூலம் செதுக்கி கொடுத்ததற்காக இந்த மன்னிப்பு....
                   விக்ரமிலிருந்து குட்டி தேவதை வரை..குட்டி தேவதையிலிருந்து விக்ரம் வரை..படம் துவங்கி முடிந்து போகும் அசாத்தியமான அன்பின் நெகிழ்வை,உண்மையின் அடையாளத்தை தந்ததற்கு நன்றி..சிறிய கதாபாத்திரங்களை எல்லாம் கடந்து மன நோயாளிகளாக தேர்வு செய்த அந்த நால்வரும் அவர்களின் உலகமும் இன்னும் இன்னும் என என்னை மீட்டிக் கொண்டே போகிறது..நிலா நிலாவிடம் பேச சொல்வதை  தொடர்ந்த காட்சிகளின் மூலம் நிகழ்த்தும் ஓவியங்களை மைகளால் தீட்ட இயலாது..கதை சொல்லும் பாடலில் கொண்டிருக்கும் எல்லா உத்திகளையும் கவனிக்கும் போது.. யோவ்..இவ்ளோ நாள் எங்கையா இருந்த விஜய்..அப்பப்பா..
                       ஒரு தெளிந்த படைப்பாளியான நீ இது வரை செய்த எல்லா கதைகளும் எங்கிருந்தோ கலவாட்டப்பட்ட சாயலை தொலைத்தால் நீ உலகத்தின் முன்னால்  திரண்டு நிற்ப்பாய்..உன்னை புகழவோ ,இகழவோ  இயலாத அளவுக்கு என்னை மீட்டி சென்ற உனக்கும் உன் படைப்புக்கும் எப்போதும் நன்றிகள்..போயி கதைகளை தேடு..மனிதர்களிடம் படி..அதை விட்டு விட்டு திருட்டு வேளையில் மட்டும் ஈடுபடாதே..அது நீ அடைய வேண்டிய பெரும் புகழை,உன் அசாத்திய கலை நுணுக்கத்தை ,உன் திறமையை கொன்று விடும்......

This entry was posted on Tuesday 19 July 2011 at 01:41 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment