தமிழ் பெரும்பரப்பில் வணிகமயப்பட்ட திரைப்படங்களின் ஊடாக மேல்தட்டு மனோபாவங்களும்,கலைக்கு எதிரான வன்முறை சொல்லாடல்களும் கொழுத்து கிடந்தன..
நான் சென்னையை நோக்கி இடம் பெயருகையில் குறும்படம் ,ஆவணப்படம் ,செய்திப்படம் என்கிற சொல்லாடல்கள் என் காதுகளை முதன் முதாலாக வந்தடைந்ததே எனது நண்பன் உமர்,மற்றும் மாறி மகேந்திரன் மூலமாகத்தான்..உலக சினிமா என்கிற வேறு ஒரு அடையாளம் மிக்க தனித்த திரைப்படங்கள் புதிய உலகை காட்ட துவங்கிய தருணம் அது ,ரஜினி,கமல்,எம் .ஜி .ஆர் ,சிவாஜி ,ராமராஜனை தவிர பெரிய புரட்சிக்கான மூலம் தெரியாத நான் புதிய உலகங்களை கண்டடைந்த பொது நண்பர் விஸ்வாமித்திரன் மூலம் அவரது அறைகளில் சித்தா மருந்து அரைத்துக் கொண்டு அதிக புரிதல்களை நோக்கி பயணப்பட்டிருந்தேன்..அதன் நீட்சியாக டான் போஸ்கோவில் அஜயன் குறும்பட விழாவை நடத்தும் பொது சிறிய கதவில் பெருங்காற்று நுழையக்கண்டேன்..
அப்பொழுதெல்லாம் இன்னும் சிறிய வகை ஒளிப்பதிவுக்கருவிகள் மக்களிடம் வந்திருக்க வில்லை ..ஆனால் அந்த குறும்பட விழா எனக்கு பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்தியது..நிழல் தொடங்கியது..அந்த சந்தர்ப்பங்களில் தான்..
அப்படி தீரா தாகத்தோடு திரைப்படங்களுக்கு மாற்றாக தமிழ் சூழல் குறும்படங்களின் மூலமும் ஆவணப்படங்களின் மூலமும் சமூகத்தின் சொல்லா வொண்ணா வாழ்க்கையை பல குறும்பட இயக்குனர்கள் பதிவு செய்தனர்..
திருநாவுகரசிலிருந்து,எடிட்டர் லெலின்,லீனா,அஜயன்,பாரதி வாசன்,..என ஒரு பெரும்படையே கிளம்பியது..
கையடக்க கருவியால் புறந்தள்ளப்பட்ட வாழ்க்கையின் துயரங்கள்,இயலாமை,கசப்பு,கோபமென,அதன் வீச்சு இனி வெட்டவே முடியாத ஆல மரம்போல தனது இருப்பை உலகுக்கு அறிவித்தார்கள் படைப்பாளிகள்..புதிய புதிய குறும்பட இயக்கங்கள் முளைத்து திசைகளை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்..
சுரேஷ்வரன் போன்ற எமது தோழர்கள் நடிப்பு பயிற்சி,அளித்து புதிய புதிய முகம் மறுக்கப்பட்ட தமிழர்களை பார்க்க அனுப்பினார்கள்..
மக்கள் தொலைக்காட்சியும் ஊடக அளவில் பெரும் பங்காற்றியது..அபோழுதுதான் கலைஞ்சர் தொலைக்காட்சியும் குறும்படங்களை கையில் எடுத்தது..எல்லோரும் மகிழ்ந்தோம் ..வணிக பெருநெருப்பை கொண்ட அரசின் தொடர்பை அருகில் வைத்திருக்கும் மாபெரும் ஊடகம் குறும்படங்களை கையில் எடுத்தபொழுது யாருக்குமே சந்தேகம் எழ வில்லை..அது நம்மையே சாய்க்கும் கோடரி என அறியவில்லை..அதற்க்கு வேர் விட இடம் தர நிறைய பேர் முன் வந்தார்கள்..ஆனால் அது பெரும் வணிக மந்திரங்களில் கட்டுப்பட்டு விட்ட திரைக்கு மாற்றாக முழித்த அந்த ஆல மரத்தின் அடியில் ஊற்றிய வேர் அழுக்கி மருந்தாக மாறும் என நினைக்கவே இல்லை..
பொண்ணுங்கள எப்படி மடக்குறது..,தம் அடிக்கிறது எப்படி,பொறுக்கியா ஏன் ஆனேன்,அப்பாவை எப்படி ஏமாத்துறது..இப்படி ஆரோக்கியம் மிகுந்த குறும்படங்களை கொடுத்து பார்ப்பன இயக்குனர்களையும்,அறிவுஜீவி புடுங்கிகள் என்ற பெயரில் விமர்சனம் வைக்கிறேன் என்ற பெயரில் நமது வீரிய விதகை அழிக்கும் விதமாக கெக்க பிக்கே என பிதற்றும் வகையிலும் கமர்சியலா இருக்கு என பேச வைத்தும் ..என்கிற பெருந்திரைப்பட மனோபாவத்தை விதைக்கும் நச்சுவாக மாற்றியிருகிறது..
ஒரு சில நல்ல முயற்ச்சிகளும் இன்று அடிபட்டு ,,ஆனந்த் பட்வர்த்தன் போன்றவர்கள் சிறை சென்றாவது மீட்டெடுக்க முயற்சித்த ஆழுமைகள் மழுங்கடிக்கப்பட்டு இன்று தன்னை இழந்த நிலையில் குறும்படங்கள் செத்துக்கிடக்கின்றன..கொஞ்சமே கொஞ்சமான ,நிழல்,தமிழ் ஸ்டுடியோ ,இன்னபிற இயக்கங்களை தவிர அதன் செயல் தொலைந்து பிணமாகி போயின..இனி என்ன செய்வீர்கள்..தயவு செய்து இந்த மாதிரி ஊதாரித்தன ,பிற்போக்கு,ஆதிக்க சக்திகளிடமிருந்து..
மீண்டும் வறியவரின் வாழ்வை பேச குறும்படங்கள் அதன் வீரியத்தோடு முளைக்குமா ..என்கிற ஆதங்கம் என்னையும் இருட்டில் அமர வைக்கிறது..
This entry was posted
on Thursday, 26 May 2011
at 06:28
. You can follow any responses to this entry through the
comments feed
.