பூச்சாண்டி 1  

Posted by நாண்

எனதருமை மக்களே.. (இதுல குடிமக்கள், குடிக்கும் மக்களும் கூட அடக்கம்தான்..)அதனால யார் பேரும் விடுபட்டு போயிருச்சுன்னு தப்பா நினைச்சு மீசை முறுக்கி சண்டைக்கு வராதீங்க.. விளையாட்டு பேச்சு போதும்.. கொஞ்சம் வினையமா பேசுவோமா? ...
எல்லாரும் இடது கையில மைய பூசிக்கிட்டு ஓட்டு போட்டோம்..
எதுக்கு?மாற்றம் வேணும்.. அதுக்குத்தான்..
மாற்றம் கண்டிப்பா தேவைதான்.. அதுக்காகத்தான் நம்ம விரலை அழுக்காக்கி வெள்ளாவி வச்சு வெளுத்த சட்டைக்காரங்கள தேர்வு செய்றோம்..ஆனா, அந்த கன்றாவி புடிச்ச பயபுள்ளைக எல்லாமே சட்டைய மட்டும்தான் வெள்ளையா வச்சிருக்குக.. மனசு எப்பவும் போல ஒரே மாதிரி சாக்கடையாதான் இருக்கு..
நம்ம மட்டும் என்னவாம்? நாலு நாள் 'அவன் சரி இல்லேன்னு இவன கொண்டு வந்தோம்.ஆனா இவனுக்கு அவனே பரவாயில்ல போல'ன்னு பொலம்பிட்டு டீக்கடை பேச்சோட எல்லாத்தையும் முடிச்சுக்கிருவோம்..
அவனுங்கள அடிச்சு திருத்துவோம்னு  என்னைக்காச்சும் நினைச்சிருக்கமா? இல்லேல்ல? அப்பறம்?..
மாற்றம் எப்படி வரும்?
சரி விடுங்க..
இனிமே யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி.. அது சூரிய பிழம்போ, குளிர் இலையோ, எதுவா வேணாலும் இருக்கட்டும்.. நாம செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு மட்டும்தான்.. நம்ம இனத்துக்கு நம்மள விட்டா வேற யாரும் ஆளே இல்ல, நம்ம இல்லேன்னா இனமே அனாதையா போயிரும்னு எல்லாரும் யோசிக்கணும்.. நாம களம் இறங்கனும்.. நிறையா உண்ணா விரதம், சாலை மறியல், அஹிம்சை போராட்டம் எல்லாம் செஞ்சு பாத்தாச்சு.. உச்சபட்சமா நிறைய தீக்குளிச்சும் பாத்தாச்சு... ஆட்சி அதிகாரம் கைல வச்சிருந்தவன் நமக்கு நிறைய அவமானத்தையும் அல்வாவையும் மட்டும்தான் நம்ம கையில கொடுத்தான்.. நாம எதிர்பாத்த மாற்றம் வந்தாலும் நமக்கு அதயேதான் திரும்ப கொடுப்பாங்க.. அதுல எந்த மாற்றமும் கிடையாது.
அதனால தெளிவா இருங்க.. இனி கேட்டா எதுவும் கிடைக்காது.. அடிச்சு கேட்டா மட்டும்தான் கிடைக்கும்.. அதனால, அடிக்க தயாரா இருங்க.. இந்த அஞ்சு வருசத்துலயாவது தமிழன் யாருன்னு இந்த உலகத்துக்கு காட்டுவோம்...
 சிரிக்க சிரிக்க நையாண்டி பேசுறது மாதிரியே சிரிச்சுக்கிட்டே சண்டையும் போடணும்.. இனி எவன் நம்ம உரிமைல, இனத்து மேல கை வச்சாலும் சரி..
அவன் டவுசர் கிழிஞ்சு தொங்கணும்.. இத்தோட இந்த கிண்டல் பேச்சு முடிஞ்சுது.. இனி கிழிப்போம்..
தயாரா இருங்க என் பிரியத்துக்கு உரிய வெள்ளை சட்டை மாமனிதர்களே.. சந்திப்போம்...
-இப்படிக்கு,
பூச்சாண்டி..   

This entry was posted on Saturday 23 April 2011 at 00:30 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment