பூச்சாண்டி 1  

Posted by நாண்

எனதருமை மக்களே.. (இதுல குடிமக்கள், குடிக்கும் மக்களும் கூட அடக்கம்தான்..)அதனால யார் பேரும் விடுபட்டு போயிருச்சுன்னு தப்பா நினைச்சு மீசை முறுக்கி சண்டைக்கு வராதீங்க.. விளையாட்டு பேச்சு போதும்.. கொஞ்சம் வினையமா பேசுவோமா? ...
எல்லாரும் இடது கையில மைய பூசிக்கிட்டு ஓட்டு போட்டோம்..
எதுக்கு?மாற்றம் வேணும்.. அதுக்குத்தான்..
மாற்றம் கண்டிப்பா தேவைதான்.. அதுக்காகத்தான் நம்ம விரலை அழுக்காக்கி வெள்ளாவி வச்சு வெளுத்த சட்டைக்காரங்கள தேர்வு செய்றோம்..ஆனா, அந்த கன்றாவி புடிச்ச பயபுள்ளைக எல்லாமே சட்டைய மட்டும்தான் வெள்ளையா வச்சிருக்குக.. மனசு எப்பவும் போல ஒரே மாதிரி சாக்கடையாதான் இருக்கு..
நம்ம மட்டும் என்னவாம்? நாலு நாள் 'அவன் சரி இல்லேன்னு இவன கொண்டு வந்தோம்.ஆனா இவனுக்கு அவனே பரவாயில்ல போல'ன்னு பொலம்பிட்டு டீக்கடை பேச்சோட எல்லாத்தையும் முடிச்சுக்கிருவோம்..
அவனுங்கள அடிச்சு திருத்துவோம்னு  என்னைக்காச்சும் நினைச்சிருக்கமா? இல்லேல்ல? அப்பறம்?..
மாற்றம் எப்படி வரும்?
சரி விடுங்க..
இனிமே யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி.. அது சூரிய பிழம்போ, குளிர் இலையோ, எதுவா வேணாலும் இருக்கட்டும்.. நாம செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு மட்டும்தான்.. நம்ம இனத்துக்கு நம்மள விட்டா வேற யாரும் ஆளே இல்ல, நம்ம இல்லேன்னா இனமே அனாதையா போயிரும்னு எல்லாரும் யோசிக்கணும்.. நாம களம் இறங்கனும்.. நிறையா உண்ணா விரதம், சாலை மறியல், அஹிம்சை போராட்டம் எல்லாம் செஞ்சு பாத்தாச்சு.. உச்சபட்சமா நிறைய தீக்குளிச்சும் பாத்தாச்சு... ஆட்சி அதிகாரம் கைல வச்சிருந்தவன் நமக்கு நிறைய அவமானத்தையும் அல்வாவையும் மட்டும்தான் நம்ம கையில கொடுத்தான்.. நாம எதிர்பாத்த மாற்றம் வந்தாலும் நமக்கு அதயேதான் திரும்ப கொடுப்பாங்க.. அதுல எந்த மாற்றமும் கிடையாது.
அதனால தெளிவா இருங்க.. இனி கேட்டா எதுவும் கிடைக்காது.. அடிச்சு கேட்டா மட்டும்தான் கிடைக்கும்.. அதனால, அடிக்க தயாரா இருங்க.. இந்த அஞ்சு வருசத்துலயாவது தமிழன் யாருன்னு இந்த உலகத்துக்கு காட்டுவோம்...
 சிரிக்க சிரிக்க நையாண்டி பேசுறது மாதிரியே சிரிச்சுக்கிட்டே சண்டையும் போடணும்.. இனி எவன் நம்ம உரிமைல, இனத்து மேல கை வச்சாலும் சரி..
அவன் டவுசர் கிழிஞ்சு தொங்கணும்.. இத்தோட இந்த கிண்டல் பேச்சு முடிஞ்சுது.. இனி கிழிப்போம்..
தயாரா இருங்க என் பிரியத்துக்கு உரிய வெள்ளை சட்டை மாமனிதர்களே.. சந்திப்போம்...
-இப்படிக்கு,
பூச்சாண்டி..   

பூச்சாண்டி பக்கங்கள்..  

Posted by நாண்

உலகமெங்கும் விரவி கிடக்கிற எம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு பூச்சாண்டி வணக்கங்கள்... எமக்கு கூறப்பட்ட வரையில் பூச்சாண்டி என்பவன் அரூபம்.. உருவமில்லா பூச்சாண்டிக்கு பயந்த நாட்கள் கணக்கில் அடங்காது.. நிதானத்தோடு நோக்கினால் பூச்சாண்டி ஒரு அவதாரம் என்றே தோன்றுகிறது...
அம்மாக்கள் மூலம் நமக்குள் இறங்கிய பூச்சாண்டி நாம் தவறுகள் செய்யும் தருணத்தில் நம்மை திருத்தவே பயன்பட்டிருக்கிறான்.. நவீனங்கள் நம்மை விழுங்கிய போதும் பூச்சாண்டி மட்டும் இன்னும் அப்படியே மாசற்று நிற்கிறான்..
எல்லோருக்குள்ளும்  உறங்கி கிடக்கிற இந்த பூச்சாண்டியின் நிதர்சன பக்கங்களுக்கு உங்களை வரவேற்கிறேன்.. நான் பூச்சாண்டி.. நீங்களும்தான்.. நிறைய படிப்போம்.. கூடவே தவறான மனிதர்களை அடிப்போம்.. வாருங்கள் களமிறங்குவோம்...


நேசித்தலின் பொருட்டே..  

Posted by நாண்

எல்லோரையும் போலவே நாங்களும் அமைதியான வாழ்வை மேற்கொள்ளவே முனைகிறோம்..பின் ஏன் இப்படியான மனநிலை வர வேண்டும்..போலி சனநாயகத்தில் ஓட்டுக்கு காசு கொடுப்பவனால் நான் தப்பு செய்தால் அடி என சாட்டை கொடுப்பானா?


                      வாகனத்தை விட்டு இறங்கமுடியாதவனை ஏர்பிடித்து உழுது காட்ட சொல்ல முடியுமா..?


                     குளிர் சாதன வசதி வசதிகளால் தன்னை நிரப்பிக்கொண்ட ஒருவனால் மக்களின் பிரச்சனைகளோடு நிருங்கி நிற்க முடியுமா ..?
                       எல்லா வினைக்கும் எதிர் வினை உண்டென்றால் எமது மக்களை கொன்றழிக்க உதவிய கருங்காலிகளுக்கு என்ன எதிர் வினையை கொடுக்க போகிறோம்..?
                      நமது இலக்குதான் என்ன ..?


ஏந்த ஏந்த குறையாத கைகளை நீட்டும் சமுகத்தை எது படைத்தது..?


சாதிய  வலைகளை இறுக்கி எம்மை பிழியும் கரங்களுக்கு எது சக்தியை கொடுக்கிறது..?
இத்தனை கேள்விகளை மேலோட்டமாக பேசிக்கொண்டிருக்கும் சமுகத்தின் நிலையை மாற்ற நாம் விரலை தட்சணையாக கேட்டு எம் ஏகலைவனின் குரலை நெருக்கிய வல்லாதிக்க கரங்களின் முகங்களை கட்டவிள்போம்..வாருங்கள்.......

அறுவடைக்காக அரிவாள் எடுங்கள் முடிந்தால் துவக்கெடுங்கள் தமிழர்களே  

Posted by நாண்

நாண் விதைக்கப்பட்டிருக்கிறேன்..அறுவடைக்காக அரிவாள் எடுங்கள் முடிந்தால் துவக்கெடுங்கள் தமிழர்களே...